×

அரசு மருத்துவமனையில் இருந்து 50,000 பேர் குணமடைந்தனர்

சென்னை : சென்னையில் உள்ள நான்கு அரசு மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 50 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் தற்போது வரை 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. இதில் 86 ஆயிரம் பேர் குணமடைந்தனர். அதில் 12 ஆயிரத்து 436 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,140 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதில் இணை நோய்கள் உள்ளவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன்படி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை ஆகிய நான்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த 4 மருத்துவமனைகளில் அட்மிட் ஆன 50 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13,219 பேரில் இதுவரை 11,798 பேர் குணமடைந்தனர். ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17,593 பேரில், 15,525 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 11,805 பேரில், 10,305 பேர் தொற்றில் இருந்து மீண்டு வீடுதிரும்பியுள்ளனர். ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட 15, 417 பேரில் 11, 449 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Tags : government hospital , Government Hospital, 50,000 people, recovered
× RELATED பாளையங்கோட்டை சிறைக் கைதி தப்பி ஓட்டம்