×

3 நாள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் சோனியா காந்தி

புதுடெல்லி: தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உடல் நலம் தேறியதால் நேற்று வீடு திரும்பினார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த மாதம் 30ம் தேதி, தனது கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்பி.க்களுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தினார். அதில், ராஜஸ்தானில் நடக்கும் பாஜ.வின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி, கட்சித் தலைமை மாற்றம் போன்றவையும் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அன்றிரவு 7 மணிக்கு வழக்கமான உடல் சோதனைக்காக காங்கா ராம் மருத்துவமனையில் சோனியா அனுமதிக்கப்பட்டார். 3 நாள் நடந்த சிகிச்சைக்குப் பிறகு நேற்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இது குறித்து, இந்த மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ரானா கூறுகையில், ‘‘சோனியா காந்தி வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்கு வந்தார். தற்போது, அவர் உடல் நலம் தேறியுள்ளார். அவருடைய உடல்நிலை சீராக இருக்கிறது,” என்றார்.

Tags : Sonia Gandhi ,home , 3 day treatment, returned home, Sonia Gandhi
× RELATED காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக்...