×

அண்ணா பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் நியமனம்

திருவள்ளூர்: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய சிண்டிகேட் உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பூந்தமல்லி பனிமலர் கல்வி குழுமத்தின் தாளாளரும், செயலாளருமான ப.சின்னதுரையை அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி அவருக்கு பனிமலர் கல்வி குழுமத்தின் முதல்வர்கள், மேலாளர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Syndicate Member ,Anna University , Anna University, Syndicate Member, Appointed
× RELATED அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிகிறது: சட்ட மசோதா தாக்கல்