×

கலைஞர் நினைவு நாள் நலத்திட்ட உதவிகள் வழங்க தீர்மானம்

திருவள்ளூர்: திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் காணொலிக் காட்சி வாயிலாக ஒன்றிய, நகர, பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர்  தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் க.பிரபு கஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் ஜி.நாராயணபிரசாத், பா.நரேஷ்குமார், ப.ச.கமலேஷ், தா.மோதிலால், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வரும் ஆக. 7ம் தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 2ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கொரோனா காலங்களில் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது. ஆதரவற்ற இல்லங்களுக்கு உணவு வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : Artist Memorial Day , Artist Memorial Day, Welfare Aid, Resolution
× RELATED தாய்மார்களுக்கு தையல் மிஷின்கள்,...