×

அரசு மருத்துவமனையில் நோயாளி திடீர் தற்கொலை

சென்னை: சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மகேஷ் (47) என்பவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். கடந்த ஜூலை 17ம் தேதி சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து கடந்த வாரம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கிடையில் நோயின் தாக்கம் அதிகமானதால் வலி தாங்க முடியாமல் தவித்து வந்தார்.

நேற்று அதிகாலை வார்டில் தங்கியிருந்தவர்கள் எழுந்திருப்பதற்கு முன்பாக எழுந்து வார்டிலே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடன் தங்கியிருந்தவர்கள் தூங்கி எழுந்தவுடன் அவர் பார்த்தபோது தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்தனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்து ராயப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து நோயின் தாக்கம் அதிகமானதால் வலியின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : suicide ,Patient ,government hospital , Government hospital, patient, sudden suicide
× RELATED புதுச்சேரி ஜிப்மரில் நாளை...