×

சத்துணவு ஊழியரின் ஊதிய பிடித்தம் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்

சென்னை: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் தலைவர் சுந்தரம்மாள் வெளியிட்ட அறிக்கை: பள்ளி குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைக்க வேண்டும் மற்றும் சத்துணவு ஊழியர்களின் பிரதானமான கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஜூலை 7ம் தேதி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக முகக்கவசம் அணிந்து அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தற்பொழுது அனைத்து துறைவாரி சங்கங்களும் தன்னுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம் நடத்தும் சூழ்நிலையில் சத்துணவு ஊழியர்களுக்கு மட்டும் ஒருநாள் ஊதியத்தை பிடிக்க வேண்டுமென்று ஆணையாளரிடம் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ஊழியர் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊதியப்பிடித்த  ஆணையை திரும்பப்பெற வேண்டும். இல்லையெனில் அடுத்தகட்ட இயக்க நடவடிக்கைக்கு செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படும்.


Tags : nutritionist , Nutrition employee, pay favorite, to get back
× RELATED கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை...