×

3 அரசு மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு நாணயத்தை விழுங்கிய குழந்தை பரிதாப சாவு: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள கடுங்கல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி நந்தினி. இவர்களின் மகன் பிரித்விராஜ்(3). நேற்று முன்தினம் காலையில் விளையாடி கொண்டு இருந்த பிரித்விராஜ் ஒரு ரூபாய் நாணயத்தை தவறுதலாக விழுங்கி விட்டான். பதறிப்போன நந்தினி, குழந்தையை ஆலுவா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அங்கு குழந்தைகள் நல டாக்டர்கள் இல்லாததால் எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கும் குழந்தைகள் நல டாக்டர் இல்லாததால் ஆலப்புழா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறினர்.

இதையடுத்து நந்தினி குழந்தையை அங்கு ெகாண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் பயப்படும் படி ஒன்றும் இல்லை. பழமும், சாதமும் கொடுத்தால் நாணயம் வெளியே வந்து விடும் என்று கூறியுள்ளனர். இதையடுத்து, நந்தினி குழந்தையுடன் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. ஆலுவா அரசு மருத்துவமனைக்கு குழந்ைதயை நந்தினி தூக்கிச் சென்றார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை குழந்தை இறந்தது. 3 அரசு மருத்துவமனையிலும் தனது குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காததே  மரணத்திற்கு காரணம் என்று நந்தினி கூறினார். இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* சாவுக்கு காசு காரணமல்ல
இச்சம்பவம் பற்றி டாக்டர்கள் கூறுகையில், ‘‘குழந்தை இறந்ததற்கு காரணம் நாணயம் விழுங்கியது அல்ல. அது வயிற்றுக்குள் இருந்ததால் மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்பு இல்லை. பிரேத பரிசோதனைக்கு பின்னரே, சாவுக்கான காரணம் தெரியும்,’’ என்றனர்.
* கொரோனா இல்லை
குழந்தைக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது. அதில், கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது.


Tags : death ,government hospitals ,Kerala , 3 Government Hospital, Treatment, Refusal, Coin Swallowing Child, Tragic Death, Kerala
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...