×

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு பீகார் முதல்வர் திடீர் அறிவிப்பு

சென்னை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் 14ம் தேதி மும்பையிலுள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலை வழக்கில், சுஷாந்த் சிங்கின் தந்தை விரும்பினால் சிபிஐ விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். இதற்கு முன் பீகார் துணை முதல்வர் சுசில் மோடி, மகாராஷ்டிரா காவல்துறை சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடர்பாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

இதுகுறித்து முதல்வர் நிதிஷ் குமார் பேசும்போது, ‘இந்த வழக்கு விசாரணையில், மகாராஷ்டிரா காவல்துறை பீகார் காவல்துறையுடன் இணைந்து ஒத்துழைக்க வேண்டும். காரணம், பீகாரில் உள்ள பாட்னா காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாநில காவல்துறைக்கும் இடையே எந்த மோதலும், கருத்து வேறுபாடும் இல்லை. எனவே, சுஷாந்த் சிங்கின் தந்தை விரும்பி னால் மட்டுமே சிபிஐ விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.


Tags : Bihar ,Sushant Singh ,Chief Minister , Sushant Singh, Suicide Case, Bihar Chief Minister, Announcement
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!