×

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை; குற்றாலத்தில் குளு,குளு சீசன்: அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

தென்காசி: மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதோடு சீசன் அருமையாக உள்ளது. குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் காலத்தில் குறிப்பிடத்தக்க அளவில் சாரல் இல்லை. மொத்தம் உள்ள 90 நாட்கள் சீசனில் 60 நாட்கள் அதாவது மூன்றில் இரு பங்கு சீசன் காலம் நிறைவடைந்து விட்ட நிலையில் ஒரு சில தினங்கள் மட்டுமே சாரல் பெய்தது. கடந்த சில நாட்களாக குற்றாலத்தில் சாரல் இல்லாத நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று மழை பெய்தது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இரவிலும் நல்ல சாரல் நீடித்தது. இன்று காலை அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது. மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து விழுகிறது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றிலும் தண்ணீர் கொட்டுகிறது. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதோடு, இதமான தென்றல் காற்று வீசியது. குற்றாலம் சீசன் அருமையாக இருந்தபோதிலும் கொரோனா ஊரடங்கால் அருவிகளில் யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : catchment areas ,Courtallam Klu , Watershed area, rain, court in Kulu, Kulu season
× RELATED காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில்...