உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி: அச்சத்தில் கட்சி பிரதிநிதிகள்..!!

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பாஜகவை சேர்ந்த அம்மாநில அமைச்சர் கமலா ராணி உயிரிழந்த நிலையில் இவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாமானியர்கள் முதல் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் வரை பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகளைப் பெற்றவுடன், நான் சோதனை செய்ய முடித்தேன். மிக லேசான அறிகுறி இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் கொரோனா உறுதியானது.

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் கேபினட் மந்திர சபையில் இடம் பிடித்திருந்தவர் கமலா ராணி வருண், 62 வயதான இவருக்கு கடந்த மாதம் ஜூலை 18ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எனினும், அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு தீவிரம் அடைந்தே காணப்பட்டது. நுரையிரலில் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு உயிர்காக்கும் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் கடும் முயற்சிகள் எடுத்த போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று கமலா ராணி உயிரிழந்துள்ளார். இந்த துயர சம்பவத்தை அடுத்து தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>