×

நாகுடி பகுதியில் அம்மை நோய் பாதித்த கால்நடைகளுக்கு சிகிச்சை

அறந்தாங்கி: தினகரன் செய்தி எதிரொலியாக நாகுடி பகுதியில் அம்மை பாதித்த கால்நடைகளுக்கு சிறப்பு முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அறந்தாங்கியை அடுத்த நாகுடி ஊராட்சிக்கு உட்பட்ட அரியமரக்காடு, சீனமங்கலம், களக்குடி, அருணாச்சலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாடுகளுக்கு அம்மை நோய் தாக்கியது. இந்த நோய் வேகமாக மற்ற மாடுகளுக்கு பரவியது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்தனர். இதுகுறித்து நேற்றைய தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. தினகரனில் வெளியான செய்தியின் எதிரொலியாக நேற்று நாகுடி கால்நடை மருத்துவர் உதயபெருமாள் தலைமையில் கால்நடை மருத்துவக்குழுவினர் நாகுடி ஊராட்சிக்கு உட்பட்ட அரியமரக்காடு,

சீனமங்கலம், நாகுடி, களக்குடி, அருணாச்சலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முகாம் அமைத்து, சுமார் 450க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு அம்மை நோய் பரவாமல் இருக்க தடுப்பூசி போட்டனர் மேலும் அம்மை நோய் தாக்கிய மாடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். தினகரனில் வெளியான செய்தியின் எதிரொலியாக நாகுடி பகுதியில் அம்மை நோய் தாக்கிய மாடுகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்த கால்நடை பராமரித்துறையினருக்கும், செய்தியை வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் விவசாயிகள் நன்றியை தெரிவித்து கொண்டனர்.

Tags : area ,Nagudi , Treatment for measles, mumps, and cattle
× RELATED கடலாடி பகுதிக்கு புதிய திட்டங்கள்