×

தடைக்காலம் நீங்கியது; குளச்சலில் ஐஸ் தட்டுப்பாட்டால் 200 படகு கடலுக்கு செல்லவில்லை: 100 விசைப்படகுகளே மீன்பிடிக்க சென்றன

குளச்சல்: குமரி  மாவட்டம், குளச்சல் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300 விசைபடகுகள்  மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் மேற்கு கடற்கரை  பகுதியில் கடந்த 60 நாட்களாக மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்ததால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்ைல. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தடைக்காலம் நீங்கியது. இதையடுத்து நேற்று காலை முதல் குளச்சல் துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றன. மொத்தம் 100 படகுகள் மட்டுமே  மீன் பிடிக்க சென்றன.  மீதமுள்ள விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தி விடப்பட்டிருந்தன.  

பேருந்துகள் ஓடாததால் வெளியூர் தொழிலாளர்கள் பணிக்கு வராதது மற்றும் ஐஸ் கட்டி தட்டுப்பாடு போன்றவையே இதற்கு காரணம். இந்தநிலையில் போதிய ஐஸ்கட்டி கிடைத்ததும் அவை நிரப்பப்பட்டு மீதமுள்ள விசைப்படகுள் மீன்பிடிக்க செல்லும் என கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் விசைப்படகுகளை பழுது பார்ப்பது, வர்ணம்  பூசுவது, வலைகளை சரிசெய்வது, ஐஸ் கட்டி நிரப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : sea ,Kulachal , Barrier, ice shortage in puddle, boat
× RELATED பா.ஜ நிர்வாகிகளை விரட்டியடித்த மீனவர்கள்