×

இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் வெளியிட இங்கிலாந்து திட்டம்!

லண்டன்: நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய இங்கிலாந்தின் அமைச்சர் ரிஷிசுனிக், இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிட ராயல் மின்ட் அட்வைஸரி கமிட்டி ஆலோசித்து வருகிறது. மேலும் காந்தி கருப்பு மற்றும் ஆசிய ,பிற சிறுபான்மை இன மக்களை அங்கீகரிப்பதற்காக அரும் பாடு பட்டார் என்பதை ஆலோசனை குழுவிடம் தெரிவித்து உள்ளதாக கூறினார். மேலும் ராயல் மின்ட் அட்வைஸரி கமிட்டி வெளியிட்டுள்ள மின்னஞ்சலில் காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயத்தை வெளியிட (ஆர்எம்ஏசி) முடிவு தற்போது பரிசீலித்து வருகிறது என தெரிவித்துள்ளது. 1869ல் பிறந்த காந்தி, தனது வாழ்நாள் முழுவதும் அகிம்சைவழியினை கடைப்பிடித்தது மட்டுமல்லாமல் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

இதன் காரணமாக அவரது பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் திகதி சர்வதேச அகிம்சை தினமாக அனுசரிக்கப்படுகிறது. பெரும்பாலும் இந்தியாவின் தேசத்தந்தை என்று குறிப்பிடப்படும் மகாத்மா காந்தி பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியாவை விடுவிப்பதற்கு சில மாதங்களுக்குப் பின்னர் 1948ம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில், உலகில் பல நாடுகள் காந்தியின் போதனைகளை தினந்தோறும் கற்று வருகிறார்கள். காந்தியை ரோல் மாடலாக ஏற்று பல நாட்டில் தலைவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். பல நாட்டில் ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பு குறியீடாக மாகாத்மா காந்தி திகழ்ந்து வருகிறார். ரத்தம் சிந்தாமல் போராட்டம் நடத்தி, மக்களின் ஒற்றுமையின் மூலமும், அமைதியான போராட்டங்கள் மூலமும் ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த முடியும் என்ற வித்தையை கற்று கொடுத்தவர் காந்தி, என்பது குறிப்பிடத்தக்கது.  



Tags : UK ,Mahatma Gandhi ,Father of the Nation ,India , India, Mahatma Gandhi, Coin, UK
× RELATED திருமயம், ஆலங்குடியில் 20 அரசு...