×

சுஷாந்த் சிங் தற்கொலைக்கு ஏவல், செய்வினை காரணம்? : நடிகை ரியா மீது சுஷாந்த் அலுவலக உதவியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு!!!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலைக்கு அவரது காதலி ரியா சக்கரபோர்த்தியின் ஏவல் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14ம் தேதி மும்பை பாந்திராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை இந்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.  இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சுஷாந்த் சிங் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவரது காதலியின் ஏவல் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாக சுஷாந்த் அலுவலக உதவியாளராக வேலை செய்த ராம் என்பவர் புகார் தெரிவித்துள்ளார். மேலும், தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு சுஷாந்த் சிங் பலவீனமானவர் இல்லை என்றும், அவர் மிகுந்த தைரியசாலி என்றும் ராம் தெரிவித்துள்ளார். ஆனால் சுஷாந்த் சிங் வாழ்வில், ரியா நுழைந்த பின்னர் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக சுஷாந்த் சிங் எப்போது மனச்சோர்வு மிக்கவராகவே காணப்பட்டார் என்றும் ராம் கூறியுள்ளார். இதனையடுத்து, ரியா பல மருந்துகளை சுஷாந்துக்கு கொடுத்து வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுஷாந்தின் அந்தரங்க ரகசியங்களை கண்டறிந்து கூற ரியா கட்டளையிடுவார் என்றும், அவ்வாறு கூற தவறும் பணியாளர்களிடம் சண்டை போடுவது வாடிக்கை என்றும் ராம் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு ஊதியத்தை தாமதப்படுத்தி ரியா பல கொடுமைகளை செய்ததாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். இதனால் சுஷாந்த் சிங் மரணத்திற்கு ரியாவின் ஏவல், செய்வினைதான் காரணம் என்று அலுவலக உதவியாளர்ராம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Tags : Sushant Singh ,Riya ,office assistant , Sushant Singh, Suicide, Actress Riya, Office Assistant
× RELATED சுஷாந்த் சிங் மரண வழக்கு ரியாவுடன்...