×

நாசா விண்வெளி வீரர்கள் 2 பேர் பூமிக்கு திரும்புகின்றனர்: சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து வீரர்கள் புறப்பாடு

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற நாசா விண்வெளி வீரர்கள் 2 பேர் அங்கிருந்து பூமிக்கு திரும்பியுள்ளனர். நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த பாப் பென்கென் மற்றும் டோ ஹர்லி ஆகியோர் கடந்த மே மாதம் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் க்ரியூ டிராகன் என்ற விண்வெளி ஓடத்தில் சென்ற இருவரும் தற்போது பூமிக்கு திரும்பி வருகின்றனர். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து உள்ளுர் நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் 2 வீரர்களும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் விண்வெளி ஓடத்தில் புறப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

மெக்சிகோ வளைகுடா மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 7 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் இன்று பிற்பகல் 2.48 மணியளவில் வீரர்கள் இருவரும் தரையிறங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக விண்வெளி ஓடத்தின் பயணம் தடைபடாமல் இருக்க நாசா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவன விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு பின்னர் 2 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : astronauts ,NASA ,Soldiers ,Earth 2 ,International Space Station ,ocean ,SpaceX , NASA, Astronauts, Earth, International Space Station, Space-X
× RELATED ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வாகனம்: 4 வீரர்கள் படுகாயம்