×

தங்கம் விலை மேலும் மேலும் அதிகரிப்பு: 42 ஆயிரத்தை நெருங்கியது சவரன்

* காட்சி பொருளாகிறது தங்கம்
* ஏழை, நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை சவரன் 42 ஆயிரத்தை நெருங்கியது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது ஏழை, நடுத்தர மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனாவால் உலக பொருளாதாரம் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. ஆனால், தங்கம் விலை மட்டும் விண்ணை முட்டும் அளவுக்கு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 20ம் தேதி முதல் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கிராமுக்கு 57 அதிகரித்து ஒரு கிராம் 5,150க்கும், சவரனுக்கு 456 அதிகரித்து சவரன் 41,200க்கு விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் புதிய சாதனையாகும்.

இந்நிலையில் நேற்று 12வது நாளாக தங்கம் விலை அதிகரித்தது. கிராமுக்கு 46 அதிகரித்து ஒரு கிராம் 5196க்கும், சவரனுக்கு 368 அதிகரித்து சவரன் 41568க்கு விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை. தங்கம் விலை 42 ஆயிரத்தை நெருங்கி வருவது ஏழை, நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால் நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனை ஆகும். நாளை மார்க்கெட் தொடங்கியதும் தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரிய வரும்.


Tags : Gold price
× RELATED மார்ச்-29: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!