×

ஊரடங்கால் குழந்தைகள் வறுமையில் தவிப்பு தாய் தூக்கிட்டு தற்கொலை

தாம்பரம்: தாம்பரம் அடுத்த முடிச்சூர் சுவாமி நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் கல்பனா (30). இவரது கணவர் சிவக்குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் கல்பனா, கணவரைப் பிரிந்து, தனது இரண்டு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.  பிரபல தனியார் உணவு பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் கல்பனா வேலை செய்து, குழந்தைகளை வளர்த்து வந்தார். இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக  சரிவர வேலை இல்லாததால், கல்பனாவுக்கு குறைந்தளவு சம்பளமே வழங்கப்பட்டுள்ளது. இதனால், வீட்டு செலவிற்கு பணமில்லாமல் தவித்து வந்தார். தனது குழந்தைகள் வறுமையில் வாடுவதை கண்டு மணமுடைந்த அவர், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : suicide ,Curriculum children , Curfew, children, mother, hanging and suicide
× RELATED குழந்தைகளிடம் உரையாடத் துவங்குவோம்..!