தஞ்சை சாஸ்த்ரா பல்கலையில் பொறியியல், சட்ட படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

சென்னை: தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் 2020-21ம் ஆண்டிற்கான பொறியியல் மற்றும் சட்டப்படிப்பு சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. பொறியியல் சேர்க்கைக்கு சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளியை சேர்ந்த நரசிம்மன் காந்த் கூட்டு மதிப்பெண் தரவரிசை பட்டியலில் தேசிய அளவில் 99.2462 விழுக்காடு பெற்று முதலிடம் பெற்றுள்ளார். சமனப்படுத்தும் முறையில் பாலக்காட்டை சேர்ந்த GMMGHS பள்ளியை சேர்ந்த டியுதி தம்பன் 1191/1200 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.NTR Junior College, Telanganaவை சேர்ந்த மைனம் ஹர்சினி சட்ட படிப்பில் சேர்வதற்கான சமனப்படுத்தும் முறையில் தேசிய அளவில் 98.1 விழுக்காடு பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.

மாணவர்கள் இணைய வழி மூலம் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டிய தேதி, நேரம் ஆகிய விவரங்கள் sastra.edu என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு  இணையவழி  கலந்தாய்வு ஆகஸ்ட் 1-29, 2020 வரை நடைபெறும். ஜம்மு காஷ்மீர், அந்தமான் நிகோபார் மாநில மாணவர்களுக்கு தனிச்சலுகையும். தஞ்சாவூர், திருச்சி மாவட்ட மாணவர்களுக்கு 30 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.  முதலாண்டு பொறியியல் மற்றும் சட்டப்படிப்பு மாணவர்களுக்கு இணையவழி மூலம் orientation programme ஆகஸ்ட் 30,2020 முதல் நடைபெறும்.

Related Stories: