×

தமிழகம் உட்பட வெளிமாநிலங்களில் இருந்து ஆந்திரா வருபவர்களுக்கு உடனடியாக இ-பாஸ்: ஆந்திர அரசு முடிவு

திருமலை: தமிழகம், கர்நாடகா உட்பட வெளிமாநிலங்களில் இருந்து ஆந்திரா வருபவர்களுக்கு உடனடியாக இ-பாஸ் வழங்கப்படும் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊரடங்கு தளர்வு 3.0  நிபந்தனைகள் வெளியிட்டது. இதில், ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை என தெரிவித்திருந்தது. தமிழகத்தில் ஏற்கனவே மாவட்டம் விட்டு மாவட்டம் மற்றும் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆந்திர மாநில கோவிட்-19  சிறப்பு அதிகாரி கிருஷ்ணபாபு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு ஊரடங்கு தளர்வு தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளின்படி, இதுநாள் வரை வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இ-பாஸ் வழங்கப்படாமல் இருந்தது.

இன்று முதல் இக்கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளது. http://spandana1.ap.gov.in/Registration/onlineRegistration.aspx என்ற வெப்சைட்டில் பதிவு செய்து கொள்பவர்களின் செல்போன் எண், இ-மெயில் முகவரிக்கு உடனடியாக இ-பாஸ் வழங்கப்பட்டது.  மாநில எல்லைப்பகுதிகளில் இ-பாஸ் மற்றும் அவரவர் அடையாள அட்டையை காண்பித்து மாநிலத்திற்குள் வரலாம். இந்த முறை ஆந்திர மாநிலத்தில் யார்? யார்? வருகிறார்கள் எத்தனை பேர் வருகிறார்கள்? எங்கு செல்கிறார்கள்? என்பதை கண்காணிக்க உள்ளோம். வெளிமாநிலங்களிலிருந்து ஆந்திராவிற்கு வரக்கூடியவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், கிராம செயலகத்திற்கு அனுப்ப வேண்டும். அவர்களை 15 நாட்கள் கண்காணிக்க வேண்டும்.  

இந்த உத்தரவின் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய மற்றும் வியாபார நிமித்தமாகவும், குடும்ப உறவினர்கள் வீடுகளுக்கு சென்று வெளிமாநிலங்களில் தங்கியவர்களை  மீண்டும் அவரவர் ஊர்களுக்கு வர மிகவும் சுலபமாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Andhra Pradesh ,Andhra Pradesh Government ,Tamil Nadu , Tamil Nadu, Outstations, Andhra, e-Pass, Andhra Government
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி