×

மதுரையில் மாரிதாஸ் வீட்டில் போலீஸ் சோதனை

மதுரை: மதுரையை சேர்ந்தவர் மாரிதாஸ். போலி இமெயிலை காட்டி சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்பியதாக அவர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசில்  புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுெதாடர்பாக விசாரிக்க டிஎஸ்பி சரவணபெருமாள் தலைமையில் 4 பேரை கொண்ட குழுவினர், சென்னையில் இருந்து நேற்று மதியம் மதுரை வந்தனர். இந்த குழுவினர் கே.புதூர், சூர்யா நகரில் உள்ள மாரிதாஸ் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரது வீட்டில் சுமார் 3 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.


Tags : Police raid ,house ,Madurai ,Maridas , Madurai, Maridas, police check
× RELATED சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்குதலில்...