×

சென்னை மாநகராட்சியில் பொறியாளர்கள் 35 பேருக்கு கொரோனா: தலைமை பொறியாளரும் பாதிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் கடந்த சில நாட்களாக பொறியாளர்கள் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது வரை பொதுத்துறை தலைமை பொறியாளர் நந்தக்குமார் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட பொறியாளர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சென்னையில் தொற்றை கட்டுப்படுத்த வார்டு வாரியாக உதவி பொறியாளர் தலைமையில் மைக்ரோ குழுக்கள் அமைக்கப்பட்டு தினசரி பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட வீடு தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளை மாற்றவது, தகரம் அடிப்பது உள்ளிட்ட பணிகளை பொறியாளர்கள் செய்து வந்தனர். இந்த பணிகளை செய்து வந்த பொறியாளர்கள் தான் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : engineers ,Chennai Corporation ,Corona ,Chief engineer , Chennai Corporation, Engineers, Corona, Chief Engineer
× RELATED தேசிய பொறியாளர் தினம் இன்று.. நமக்கு...