×

இன்று தளர்வில்லாத ஊரடங்குகாசிமேடு மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்: சமூக இடைவெளியை கடைப்பிடிக்க போலீசார் அறிவுரை

சென்னை: தளர்வில்லாத ஊரடங்கையடுத்து நேற்று காசிமேடு மீன் மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க போலீசார் அறிவுறுத்தினர்.தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த மாதம் அனைத்து ஞாயிற்று கிழமையும்  கடைகள் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் 7வது கட்டமாக ஆகஸ்ட் 31ம் தேதி வரையில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடந்த மாதம் கடைப்பிடிக்கப்பட்டதை போன்று ஆகஸ்ட் மாதத்தில் உள்ள 5 ஞாயிற்றுக் கிழமைகளும் தளர்வில்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.  இதையடுத்து இந்த மாதத்தில் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று தளர்வில்லாத முழு ஊரடங்கு என்பதாலும், பக்ரித் பண்டிகை என்பதால் நேற்று சனிக்கிழமையில் சென்னையில் உள்ள காய்கறி கடைகள் மற்றும் காசிமேடு மற்றும் பட்டினப் பாக்கம் மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் வழக்கத்ைத விட அதிகமாக காணப்பட்டது.

காசிமேடு மீன்மார்க்கெட்டில் 100க்கும் மேற்ப்பட்ட வியாபாரிகள் நேற்று மீன்வாங்க வந்ததால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் இன்று தளர்வில்லாத முழு ஊரடங்கு என்பதால் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் குவிந்தனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் 4 நுழைவு வாயில்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அடையாள அட்டை வைத்திருந்த வியபாரிகளை மட்டுமே அனுமதித்தனர்.  இதேபோல் சென்னையில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகள் சிறிய மீன் மார்க்கெட்டுகளிலும் பொது மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


Tags : fish market ,Kosimedu , Curfew, Kasimedu Fish Market, People, Community Gap, Police
× RELATED வாலிபருக்கு கத்திக்குத்து 10 பேர் கைது வேலூர் மீன் மார்க்கெட்டில் தகராறு