×

சென்னை கிண்டி கிங் ஆய்வகத்தில் 10 ஆண்டுக்கு பின் பிசிஜி தடுப்பூசி தயாரிக்கும் பணி தொடக்கம்: 1.7 கோடி டோஸ் தயாரிக்க திட்டம்

சென்னை: சென்னை கிண்டி கிங் ஆய்வக த்தில் கிட்டதிட்ட 10 ஆண்டுகள் கழித்து பிசிஜி தடுப்பூசி தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தா ண்டு இறுதிக்குள் 1.7 கோடி ேடாஸ் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காசநோய் தடுப்பு நடவடிக்கையில் பிசிஜி தடுப்பூசி முக்கிய பங்காற்றி வருகிறது. முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த தடுப்பு மருந்து அதிகம் போடப்படுகிறது. நாடு முழுவதும் இந்த தடுப்பு மருந்தின் தேவை ஒரு ஆண்டுக்கு 700 முதல் 800 டோசாக இருந்தது. இதில் 40 முதல் 50 சதவீதத்திற்கும் மேலான தேவையை சென்னை கிண்டி கிங்ஸ் ஆய்வகத்தில் உள்ள காசநோய்க்கான பிசிஜி தடுப்பு மருந்து ஆய்வகம் பூர்த்தி செய்து வந்தது.

கடந்த 1948ம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த நிறுவனம் கடந்த 2008ம் ஆண்டு போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற காரணத்தால் உற்பத்தியை நிறுத்தியது. இந்நிலையில் இந்த ஆண்டு உரிய அனுமதி பெற்று மீண்டும் உற்பத்தி தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் முதற்கட்டமாக 4.5 லட்சம் டோஸ் பிசிஜி தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.  இந்த ஆண்டு இறுதிக்குள் 1.7 கோடி டோஸ் தடுப்பு மருந்து தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் தடுப்பூசி உற்பத்தி தொடங்கியுள்ளதால் பிசிஜி தடுப்பு மருந்தின் விலை குறைய வாய்ப்பிருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் தகவல் தெரிவிக்கிறனர்.

தற்போது கொரனோ தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் வயது முதியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பிசிஜி தடுப்பு மருந்துகளை அளிக்க ஐசிஎம்ஆர் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து சோதனை அடிப்படையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பிசிஜி மருந்துகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.




Tags : Launch ,PCG ,Chennai Kindi King Laboratory ,Commencement , Chennai, Kindi King Laboratory, PCG Vaccine
× RELATED தனியார் நிறுவன ராக்கெட் ஏவுவதற்கு இஸ்ரோ அனுமதி!!