×

வத்திராயிருப்பு: மேற்கு தொடர்ச்சி மலையில் பயங்கர தீ: விலங்குகள் ஓட்டம்

வத்திராயிருப்பு:  வத்திராயிருப்பில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் வனவிலங்குகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தன. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியைச் சுற்றி மேற்கு தொடச்சி மலை உள்ளது. இங்கு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு கிழக்கு பகுதியில் பாப்பநத்தான் கோயில் உள்ளது. இதன் மலைப்பகுதியில் நேற்று திடீரென செடி, கொடிகளில் தீப்பற்றி கொண்டது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனால் வனவிலங்குகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தன. வனச்சரகர் கோவிந்தன் உத்தரவின்பேரில், 7 வனத்துறையினர் மலைப்பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீ பிடித்தது குறித்து, வனத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Tags : fire ,Vatri ,Western Ghats , Western Continuum Mountains, Terrible Fire, Animals
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...