×

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 9,601 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 31 ஆயிரத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 9,601 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,31,719- ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 322 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 15,316-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 10,725 பேர் கொரோனாவில் டிஸ்சார்ஜ்; இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2,66,883-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Maharashtra , Maharashtra, Corona infection
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...