செண்பகராமன்புதூர் குடோன் பணியாளர்கள் 4 பேருக்கு கொரோனா: டாஸ்மாக் சூப்பர்வைசர்கள் கலக்கம்

ஆரல்வாய்மொழி: குமரி மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கான குடோன் செண்பகராமன்புதூரில் செயல்பட்டு வருகிறது. குடோன் மற்றும் சில்லரை என 2 பிரிவுகள் உள்ளன. இங்கிருந்து தான் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சரக்கு சப்ளை ஆகிறது. இதனால் தினமும் டாஸ்மாக் கடை சூப்பர் வைசர்கள் நேரடியாக வந்து தங்களுக்கு தேவையான சரக்குகளை ஆர்டர் செய்து பெற்று செல்வது வழக்கம். இங்குள்ள குடோன் அலுவலக பிரிவில் 10க்கும் ேமற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன் சூரங்குடியை சேர்ந்த பணியாளர் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா உறுதியானது தெரியவந்தது.

இதையடுத்து கோட்டார், புதுக்கிராமம், காப்புக்காடு பகுதியை சேர்ந்த சக பணியாளர்களுக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இந்த 3 பேருக்கும் கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்தது. தற்போது  4 பேரும் கோணம் அரசு பாலிடெக்னிக் கோவிட் கேர் சென்டரில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் தற்போது குேடான் அலுவலக பிரிவு மூடப்பட்டுள்ளது. ஆனால் குடோன் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றது. இந்தநிலையில் சில்லரை அலுவலக பிரிவுக்கு பணியாளர்கள் வருகை குறைந்த நிலையில் இருந்தது. இருப்பினும் 2 பணியாளர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தநிலையில் இந்த குடோனுக்கு தினமும் மாவட்டத்தில் உள்ள 100க்கும் ேமற்பட்ட டாஸ்மாக் கடையில் இருந்து சூப்பர் வைசர்கள் வந்து சரக்கு ஆர்டர் கொடுத்து பெற்று செல்வது வழக்கம். தற்போது இங்குள்ள 4 பணியாளர்களுக்கும் ெதாற்று உறுதியாகி உள்ளதால், டாஸ்மாக் கடை சூப்பர்வைசர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அவர்களுக்கும் சளி பரிசோதனை நடத்த வேண்டும் என்ற  கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories:

>