×

அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழா!: மகிழ்ச்சியின் வெளிப்பாடாக விருந்தினர்களுக்கு தயாராகும் 16 லட்சம் லட்டுகள்..!!

லக்னோ: அயோத்தியில் ராமர் கோயிலுக்காக அடிக்கல் நாட்டுவிழா நடைபெறும் போது டெல்லியில் உள்ள தூதரகங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக லட்சக்கணக்கில் லட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக வருகின்ற 5ம் தேதி அடிக்கல் நாட்டுவிழா நடைபெறவுள்ளது. அதற்காக அயோத்தி மட்டுமல்ல அதை சுற்றியுள்ள பகுதிகளும் விழாக்கோலம் பூண்டு ஓவியங்கள், மின்விளக்குகள் என வண்ணமயமாய் காட்சியளிக்கின்றன. பிரதமர் வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, தீபாவளி பண்டிகை போல அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டுவிழாவை கொண்டாட வேண்டும் என மக்களுக்கு கோவில் அறக்கட்டளையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

அதனால் தீபாவளி பண்டிகையை போலவே மகிழ்ச்சியின் வெளிப்பாடாக விருந்தினர்களுக்கு இனிப்பு வழங்க சுமார் 16 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. டெல்லியிலும், லக்னோவிலும் மும்முரமாக தயாராகும் இந்த லட்டுகள், டெல்லியில் உள்ள அனைத்து நாடுகளின் தூதரகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட உள்ளன.  எவர்சில்வர் டப்பாவில் அடைத்து லட்டுகள் அனுப்பிவைக்கப்படவுள்ளன. தொடர்ந்து, கொரோனா முன்னெச்சரிக்கையாக நேரில் வராமல் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை  மக்கள் கண்டு ரசிக்கும் வகையில், அயோத்தி முழுவதும் டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags : guests ,Ayodhya Ram Temple Foundation Ceremony , Ayodhya Ram Temple, Foundation Ceremony, Lads
× RELATED அரிமளம், திருமயம் பகுதியில் மழையை...