×

ஜப்பானில் தொடங்கியது கொரோனாவின் இரண்டாவது அலை: மக்கள் அச்சம்

டோக்கியோ: ஜப்பானில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதாக ஜப்பான் அரசு அறிவித்திருந்தது. நோய்தொற்று பரவலை விட பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஜப்பான் அரசு முன்னுரிமை அளித்ததன் விளைவாக தொற்று அதிகமாக பரவுகிறது என்று ஷோவா மருத்துவ பல்கலைக்கழக நோய்த்தொற்று நிபுணர் கூறியுள்ளார். ஜப்பானில் இரவு விடுதிகள் திறக்கப்பட்டதால் கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதாக முதற்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் மாலை 6 மணிக்கு மேல் செயல்படும் உணவகங்கள் பார்கள் ஆகியவற்றை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது அங்கு கொரோனாவின் இரண்டாவது அலை மீண்டும் துவங்கி, பலர் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜப்பானில் கொரோனா காரணமாக அமலில் இருந்த அவசர நிலை நீக்கப்பட்ட பிறகு, அந்நாட்டின் தென் பகுதியில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. ஃபுகுயோகா தீவின் கிடாக்கியுஷு நகரத்தில் கடந்த சில நாட்களில் 22 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு தொற்றை கட்டுப்படுத்த, ஜப்பான் அரசு ஒரு குழுவை அனுப்பியுள்ளது. சமீபத்தில் ஜப்பான் பிரதமர் தேசிய அவசர நிலையை நீக்கினர். அதை தொடர்ந்து பல மாநில ஆளுநர்களும் கட்டுப்பாடுகளை தளர்த்தினர்.

கொரோனா தாக்கம் குறைந்ததால் அங்கு ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு பொது இடங்கள் திறக்கப்பட்டன. மக்களும் மாஸ்க் அணிந்தபடி தங்கள் அன்றாட வேலையில் மூழ்கத் துவங்கினர். கொரோனா வைரஸ் பொதுவாக நாள்பட்ட நோய்த்தாக்கம் கொண்ட முதியவர்களையே அதிகமாகத் தாக்குகிறது. ஜப்பானில் தான் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் வயதானவர்கள் உள்ளனர். ஜப்பானின் சராசரி இறப்பு வயது 80. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்ந்து முதியவர்களை தாக்கி மரணத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மற்ற நாடுகளைவிட ஜப்பான் கொரோனாவை கண்டு அஞ்சுகிறது.



Tags : wave ,Japan ,Corona , Japan, Corona
× RELATED மோடி அலை இல்லை: பாஜக வேட்பாளர் பேச்சால் பரபரப்பு