×

சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அமர்சிங் காலமானார்

டெல்லி: சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அமர்சிங் காலமானார். நீண்ட காலமாக சிறுநீரக பாதிப்புக்காக அமர்சிங் சிகிச்சை பெற்று வந்தார். சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அமர்சிங் காலமானார். கடந்த சில மாதங்களாக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இவர் சமாஜ் வாடி கட்சியில் அசைக்க முடியாத தலைவராக வலம் வந்தவர். இவருக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

கடந்த 2013ல் அமர் சிங்கிற்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து துபாயில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மீண்டும் 2016ல் அரசியலுக்கு வந்தார். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்திடமிருந்து விலகிய பின்னர், 2008 ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்க கட்சி நகர்ந்த நேரத்தில் சமாஜ்வாதி கட்சியில் அமர் சிங் ஒரு முக்கிய தலைவராக இருந்தார்.

Tags : Amar Singh ,Samajwadi Party ,state assembly , Samajwadi Party, Member of the State Council, Amarsingh
× RELATED மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட்...