×

வளவனாற்றில் மண்டிக்கிடக்கும் வெங்காய தாமரை செடிகளால் தண்ணீர் செல்வதில் தடை: அகற்ற கோரிக்கை

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் வளவனாற்றில் மண்டிக்கிடக்கும் வெங்காயதாமரை செடிகளை அகற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்து தொண்டியக்காடு வரை ஆசிய வளர்ச்சி வங்கி நிதியில் சுமார் 19 கிலோ மீட்டர் தூரம் வளவனாற்றில் சுமார் ரூ.44.62 கோடி மதிப்பில் கரைகள், வடிகால் மதகுகள் புனரமைத்தல், கடைமடை அணைகள் புதுப்பித்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் 19.300 கிலோ மீட்டர் அளவுக்கு கரைகள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் திருத்துறைப்பூண்டி முதல் துளசியாப்பட்டினம் வரை 14.300 கிலோ மீட்டர் அளவுக்கு கரையோர தார்சாலை அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. பணிகள் முடியும் நிலையில் உள்ளது. மேலும் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வளவனாறு வடிகால் ஆறு ஆகும். தற்போது இந்த ஆறு முழுவதும் வெங்காயதாமரை செடிகள் உள்ளிட்ட பிற செடி கொடிகள் மண்டிக்கிடக்கிறது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் வடியாமல் பயிர்கள் சேதம் அடையும். எனவே மழைக்காலம் தொடங்கும் முன்பாக வளவனாற்றில் மண்டிக்கிடக்கும் வெங்காய தாமரை செடிகள் உள்ளிட்ட பிற செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : onion lotus plants ,removal , Onion lotus, water, request to remove
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...