×

சுஷாந்த் சிங் மரணத்தில் தடயங்களை பாதுகாக்க வேண்டும்!: பிரதமர் மோடிக்கு சுஷாந்த் சிங்கின் சகோதரி உருக்கமான வேண்டுகோள்..!!

புதுடெல்லி: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் தடயங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு சுஷாந்த் சிங்கின் சகோதரி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூக வலைத்தளங்கள் மூலம் மோடிக்கு சுவேதா சிங் கீர்த்தி எழுதியுள்ள கடிதத்தில், நான் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சகோதரி, முழு விவகாரத்திலும் உடனடியாக விசாரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும், தமது குடும்பம் எளிமையானது என்றும், உண்மையின் பக்கம் இருப்பிர்கள் என்று தம் மனது சொல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாலிவுட் திரையுலகில் தமது சகோதரர் சுஷாந்த் சிங்கிற்கு காட் பாதர் யாரும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். சகோதரர் மரணம் தொடர்பான வழக்கில் தடயங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் சுவேதா வலியுறுத்தியுள்ளார். சுஷாந்த்துக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, மும்பையில் முகாமிட்டுள்ள பாட்னா போலீசாருக்கு மராட்டிய அரசு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று பீகார் துணை முதல்வர் சுசில் குமார், மோடி கூறிய குற்றச்சாட்டால் வழக்கு விசாரணையில் இரு மாநிலங்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள மராட்டிய மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, மராட்டிய காவல்துறையை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று கூறியுள்ளார். சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை நிச்சயம் தண்டிக்க நடவடிக்கை எடுப்போம் என்று உத்தவ் தாக்கரே உறுதி அளித்துள்ளார்.

Tags : Sushant Singh ,sister ,death , Sushant Singh's sister urges PM to protect traces of his death
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு