×

அம்மா உணவகத்துக்கு காய்கறி, மளிகை வாங்கியதில் மாநகராட்சி 30 கோடி பாக்கி: நடவடிக்கை எடுக்க டியுசிஎஸ் கோரிக்கை

சென்னை: டியுசிஎஸ், தொமுச, ஐஎன்டியுசி, ஜெஎம்எஸ் தொழிற்சங்க நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:  சென்னை மாநகராட்சியில் செயல்படம் அம்மா உணவகங்களுக்கு டியுசிஎஸ் நிறுவனம் சார்பில் காய்கறி, மளிகை பொருட்கள் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த மே மாதம் நடந்த கூட்டுக் கொள்முதல் கூட்டத்தில் கிடங்கு காப்பாளர்களிடம் தேவைப்பட்டியல் பெற்றபோது, அவர்கள் கூறியபடி பருப்பு கொள்முதல் செய்யாமல், துறையின் உயர் அதிகாரி இஷ்டத்திற்கு கமிஷனுக்கு ஆசைப்பட்டு சுமார் 200 டன் பருப்பு மூன்று வகைகளில் கொள்முதல் செய்தார். இன்று வரை சுமார் 40 டன் பருப்பு விற்காமல் உள்ளது.

பருப்பு கொள்முதல் செய்ததில் மட்டும் சுமார் 6 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு கமிஷன் பெற்றுத்தர கொள்முதல் பிரிவில் 75 வயதான முதியவர் இன்னும் தினக்கூலியாக செயல்பட விதிகளை மீறி அனுமதி  அளித்துள்ளனர்.  அம்மா உணவகத்துக்கு டியுசிஎஸ் நிறுவனம் சார்பில் காய்கறி, மளிகை பொருட்கள் சப்ளை செய்ததற்காக சென்னை மாநகராட்சி டியுசிஎஸ் நிறுவனத்துக்கு சுமார் 30 கோடி தர வேண்டியுள்ளது. இந்த தொகை நிலுவையில் உள்ளது. கமிஷனுக்கு மட்டும் ஆசைப்படும் உயர் அதிகாரிகள் மாநகராட்சியிடம் இருந்து இந்த தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு தர வேண்டிய மானியத்தொகை சுமார் 400 கோடியை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
கூட்டுறவு துறை சார்பில் இயங்கும்  டியுசிஎஸ் நிறுவனத்திற்கு உயர் அதிகாரிகளால் மாதம்  20 லட்சம் நஷ்டம்  ஏற்படுவதாக ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது. இதற்கு  சம்பந்தப்பட்ட உயர் அதிகாரி, ஒரே நேரத்தில் 10 லட்சம் டீத்தூள் (100  கிராம்) பாக்கெட்டுகளை தர முடியாத நிலையில்தான் ஊட்டி டீத்தூள் வாங்க  முடியவில்லை என்று கூறி உள்ளார். உண்மையில், வேறு கம்பெனியை சேர்ந்த 2  லட்சம் டீத்தூள் வாங்கியதன் மூலம் 13.5  லட்சம் கமிஷன் தொகை  கிடைத்துள்ளது. இதை மறைக்கவே பொய் சொல்லியுள்ளார். அதேபோல், சமையல் எண்ணெயை தனியார் கடைகளைவிட அதிக  விலைக்கு டியுசிஎஸ் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகளில் விற்பனை  செய்ய வற்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags : restaurant ,Corporation ,TUCS ,Amma , Mom Restaurant, Vegetable, Grocery, Managarat, TUCS
× RELATED சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...