×

பொது இடங்களில் இறைச்சிக்கு விலங்குகளை வெட்டினால் நடவடிக்கை: மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: அரசால் அங்கீகரிக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெறப்பட்ட இறைச்சி கூடங்களில் மட்டுமே இறைச்சிக்காக விலங்குகள் வெட்டப்பட வேண்டும்.  1961ம் ஆண்டு  பிறப்பிக்கப்பட்ட  சட்டத்தின்படி,  இறைச்சி கூடங்களை  தவிர்த்து பிற இடங்களில்,  மத நிகழ்வுகளின் போதும், வழிபாடுகளின் போதும் இறைச்சிக்கென விலங்குகள் வெட்டப்படுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.  அது பக்ரீத் பண்டிகைக்கும் பொருந்தும். இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.


Tags : places ,Corporation , Public Places, Meat, Animals, Corporation
× RELATED கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு..!!