×

தமிழக ராணுவ வீரர் சீனா எல்லையில் மரணம்

நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள புள்ளவராயன்குடிகாடு வடக்குத்தெருவை சேர்ந்தவர் திருமூர்த்தி(47). இவர், காஷ்மீரில் உள்ள சீனா எல்லையில் எல்லை பாதுகாப்பு பணியில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த 26ம் தேதி இரவு பணியில் இருந்தபோது கழுத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இறந்த திருமூர்த்திக்கு தமிழரசி(44) என்ற மனைவியும், அகல்யா (24) என்ற மகளும், அகத்தியன் (22) என்ற மகனும் உள்ளனர். இவரது உடல் இரண்டு நாளில் சொந்த ஊரான புள்ளவராயன் குடிகாடு கொண்டு வரப்பட உள்ளது.


Tags : Tamil Nadu ,soldier ,Chinese ,border , Tamil Nadu soldier, China border, death
× RELATED தமிழக சட்டப்பேரவை கூட்டம் முடித்து வைப்பு