×

2019 பிஇ, பிடெக் தேர்வு முடிவுகள்: அண்ணா பல்கலை வெளியிட்டது

சென்னை:  அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கை: பிஇ, பிடெக் பட்டப்படிப்புகளில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துறை கல்லூரிகள், தன்னாட்சி பொறியியல் கல்லூரிகள், இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகள்  ஆகியவற்றில் 2018ம்  ஆண்டு ஏப்ரல், மே மாதம் மற்றும் நவம்பர், டிசம்பர் மாதம் நடந்த பருவத் தேர்வை எழுதிய மாணவர்களின் தேர்ச்சி வீதம் குறித்த விவரங்கள் annauniv.edu   என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அதில், கடந்த 2019ல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடந்த தேர்வில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துறை சார்ந்த கல்லூரிகளை சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சி மற்றும் அவர்கள் பெற்ற மதிப்பெண் வீதம் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் தேர்வு எழுதிய 3073 பேரில் 2331 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 75.85. கிண்டி பொறியியல் கல்லூரியின் மூலம் தேர்வு எழுதிய 4228 பேரில் 3033 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 7.74. அழகப்பா செட்டியார் தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தின் மூலம் தேர்வு எழுதிய 1914 பேரில் 1330 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 69.49. இதுதவிர பிஇ, பிடெக் பட்டப்படிப்பை நடத்தும் அண்ணா பல்கலையில் இணைப்பு பெற்றுள்ள 480 கல்லூரிகளில் இரண்டு கல்லூரிகளில் படித்து தேர்வு எழுதியவர்களில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை.

இந்த தேர்வில் 7 பொறியியல் கல்லூரிகளில் படித்தவர்கள்  80 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளனர். 75 சதவீதத்தை 20 கல்லூரிகள் பெற்றுள்ளன. 60 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி வீதத்தை 59 கல்லூரிகள் பெற்றுள்ளன. 101 கல்லூரிகள் 50 சதவீத தேர்ச்சி வீதத்தை பெற்றுள்ளன.  இதுதவிர 224 கல்லூரிகளில் படித்த மாணவர்கள் 25 சதவீதம் முதல் 49 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளனர். 154 கல்லூரிகளில் படித்த மாணவர்கள் 25 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி பெற்றுள்ளனர். 36 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் 10 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சியை பெற்றுள்ளனர். 9 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் வெறும் 5 சதவீத தேர்ச்சியை மட்டுமே பெற்றுள்ளனர். குறிப்பாக 16 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் ஒற்றை இலக்க (1-9) அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


Tags : Anna University , 2019 PE, BTech Exam Results, Anna University
× RELATED 2024 டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்..!!