×

பிளஸ்2 மறுதேர்வு முடிவுகள்: 63 பேர் ஆல் பாஸ்

சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மறு தேர்வில் 180 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்2 தேர்வு 24ம் தேதி வரை நடந்தது. தேர்வுகள் நடக்கும் போதே, கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்ற சூழ்நிலை உருவானது. இதையடுத்து மார்ச் 24ம் தேதி பெரும்பாலான மாவட்டங்களில் போக்குவரத்து திடீரென நிறுத்தப்பட்டது. அதனால், அன்று தேர்வு எழுத வர வேண்டிய மாணவர்கள் வரமுடியாமல் போனது. இதன்படி தமிழகம் முழுவதும் 34 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இதையடுத்து அவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதன்படி ஜூலை 27ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது.

சுமார் 886 மாணவர்கள் ஹால்டிக்கெட் பெற்ற நிலையில், கடந்த 27ம் தேதி 519 பேர்தான் தேர்வில் பங்கேற்றனர். அவர்களில் பள்ளி மாணவர்கள் 147 பேர், தனித் தேர்வர்கள் 372 பேர் அடங்குவர். தேர்வு விடைத்தாள்கள் அனைத்தும் உடனடியாக திருத்தப்பட்டு நேற்று முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி, பள்ளி மாணவர்களில் 92 பேரும், தனித் தேர்வர்களில் 88 பேரும் குறிப்பிட்ட பாடங்களில் மட்டும் தேர்ச்சி பெற்றனர். அனைத்து பாடங்களை பொறுத்தவரையில் பள்ளி மாணவர்கள் 30, தனித் தேர்வர்கள் 33 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


Tags : Plus 2 re-selection, 63 all-pass
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...