×

சில்லி பாயின்ட்...

* ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ‘இன்சைடு ஸ்டோரி’ என்ற ஆவணப் படத்தை வெளியிட்ட பின்னர் வீடியோ கான்பரன்சில் பேசிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரம் ஸ்டீவன் ஸ்மித், ‘ஐபிஎல் டி20 தொடரின் 13வது சீசனை இந்தியாவில் நடத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. அங்கு சென்று விளையாடுவதற்கு மிகுந்த ஆர்வமாக இருந்தோம்’ என்று  கூறியுள்ளார்.
* தேசிய விளையாட்டு விருதுகளுக்கான தேர்வுக் குழுவில் முன்னாள் நட்சத்திரங்கள் வீரேந்திர சேவாக் (கிரிக்கெட்), சர்தார் சிங் (ஹாக்கி), பாராலிம்பிக் வீராங்கனை தீபா மாலிக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி முகுந்தகம் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
* ஐபிஎல் டி20 போட்டிகளை பார்க்க, ஸ்டேடியங்களில் 30 முதல் 50 சதவீதம் அளவுக்கு ரசிகர்களை அனுமதிப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம் என்று யுஏஇ கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : team ,Rajasthan Royals , Rajasthan Royals team
× RELATED டெல்லி அணியின் அசத்தல் பந்துவீச்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் பரிதாப தோல்வி