×

கடுகு எண்ணெய் முதல் சீருடைகள் வரை வாங்குவதற்கு காதி கிராமத் தொழில் மையத்துடன்இந்தோ-திபெத் படை புது ஒப்பந்தம்: 50 லட்சம் குடும்பங்களை சென்று சேரும்

புதுடெல்லி: இந்தியாவில் வெளிநாட்டு பொருட்களின் மோகம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, சீனப் பொருட்கள் எங்கும் வியாப்பித்துள்ளன. இவற்றை தவிர்த்து, உள்நாட்டு தயாரிப்பு பொருட்களை பயன்படுத்தும்படி மக்களை ஊக்குவிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக, துணை ராணுவ படை வீரர்களின் தனிப்பட்ட தேவைகளுக்காக சுதேசி, காதி தயாரிப்புகளை வாங்குவதற்காக நேற்று புதிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. முதல் கட்டமாக, 1,200 குவிண்டால் கடுகு எண்ணெய், பாய்கள், துண்டுகள், போர்வைகள் போன்றவை காதி கிராம மையங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன.

இந்திய -திபேத் எல்லை படை வீரர்களுக்காக ரூ.17 கோடி மதிப்பில் 2.5 லட்ச பாய்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் யோகா ஆடைகள், தரைவிரிப்புகள், பெட்ஷீட்டுகள், சீருடை மற்றும் இன்னும் சில தயாரிப்புகளும் வாங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இந்த பொருட்கள் அனைத்தும், மத்திய ஆயுத படையில் பணிபுரியும் வீரர்கள், இதர பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக கேன்டீனில் வழங்கப்படும். இந்த கேன்டீன்கள் நாடு முழுவதும் செயல்படுவதால், சராசரியாக 50 லட்சம் குடும்பங்களுக்குப் இவை போய்ச்சேரும்.

காதி கிராம மையத்துக்கு 2,800 கோடி கிடைக்கும்
துணை ராணுவ படைகளுக்கு வேண்டிய பொருட்களில் பல, இனிமேல், காதி கிராம மையங்களில் இருந்தே கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதற்கு, இந்திய - திபேத் எல்லைப் படையுடன் நேற்று செய்யப்பட்ட ஒப்பந்தம் முதல் படியாக அமைந்துள்ளது. இனி, மத்திய ஆயுத படைகளுக்கு பொருட்களை சப்ளை செய்வதின் மூலம், காதி நிறுவனம் ஆண்டுக்கு  சராசரியாக ரூ.2,800 கோடி வருவாயை ஈட்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.

Tags : force ,families ,Khadi Village Industrial Center ,Tibetan , Mustard oil, uniforms, business center, Indo-Tibetan army, families
× RELATED சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் பறக்கும் படை சோதனை