×

ஊரடங்கு நீட்டிப்பு: சிறப்பு ரயில்கள் 15ம் தேதி வரை ரத்து: தெற்கு ரயில்வேஅறிவிப்பு

சென்னை: ஊரடங்கு ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதையடுத்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 15ம் தேதி ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: ரயில் எண் (02606, 02605) திருச்சி- செங்கல்பட்டு, திருச்சி இடையே தினமும் இயக்கப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில்கள், அதைப்போன்று (02636, 02635) மதுரை- விழுப்புரம்- மதுரை இடையே இயக்கப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில்கள், ரயில் எண் (02680, 02679) கோவை- காட்பாடி- கோவை இடையே இயக்கப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில்கள், அதைப்போன்று ரயில் எண் (06796, 06795) திருச்சி- செங்கல்பட்டு- திருச்சிக்கு மயிலாடுதுறை இயக்கப்படும் சிறப்பு ரயில்கள்,

ரயில் எண் (02675,02676) அரக்கோணம்- கோவை-அரக்கோணம் இடையே இயக்கப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில்கள், மேலும் ரயில் எண் (02083, 02084) கோவை- மயிலாடுதுறை- கோவை இடையே வாரத்தில் 6 நாட்கள் மட்டும் இயக்கப்படும் ஜன்சதாப்தி சிறப்பு ரயில்கள், அதைப்போன்று ரயில் எண் (02627, 02628) திருச்சி- நாகர்கோவில்- திருச்சி இடையே தினம் இயக்கப்படும் அதிவேக சிறப்பு ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.  மேலும் ரயில் எண் (02243, 02244) சென்ட்ரல்- டெல்லி- சென்ட்ரல் இடையே இயக்கப்படும் ராஜ்தானி சிறப்பு ரயில் வழக்கும் போல் இயக்கப்படும். மேலும் ஆன்லைன் முன்பதிவு செய்தவர்களுக்கு முழு கட்டணம் வழங்கப்படும். அதைப்போன்று கவுண்டர்களில் முன்பதிவு செய்தவர்கள் 6 மாதத்திற்குள் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : Southern Railway ,announcement , Curfew extension, special trains, Southern Railway
× RELATED சென்னையில் இருந்து நெல்லைக்கு...