×

ஆலந்தூர், சென்ட்ரல், கோயம்பேடு ஆகிய 3 மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர் மாற்றம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: ஆலந்தூர், சென்ட்ரல், கோயம்பேடு ஆகிய 3 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பெயரை மாற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 1ன் கீழ்,   ஆலந்தூர் மெட்ரோ, சென்ட்ரல் மெட்ரோ மற்றும் புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ நிலையங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகவும், பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளன.
 
எனவே, ஆலந்தூர் மெட்ரோ என்பது ‘அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ’ என்றும், சென்ட்ரல் மெட்ரோ என்பது ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ’ என்றும்,  புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ  (கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம்) என்பது ‘புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ’ என்றும் பெயர் மாற்றங்கள் செய்து ஆணையிட்டுள்ளேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.



Tags : stations ,Alandur ,Chief Minister ,announcement ,Coimbatore ,Central , Alandur, Central, Coimbatore, Chief Minister
× RELATED நீலகிரியில் 176 பதற்றமான...