×

100 ஆண்டு புளியமரம் வேரோடு சாய்ந்தது

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை அருகே பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலை பகுதியில்  சுமார் 100 ஆண்டுகள் பழமையான புளிய மரம் இருந்தது. இந்த மரத்தின் அடியில் எப்போதும் 10 பேர் ஒய்வு நேரத்தில் அமர்ந்து கொண்டு இருப்பார்கள். இந்நிலையில், நேற்று மதியம் திடீரென்று  மரம் வேரோடு சாய்ந்து, அங்கி நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது விழுந்தது. அதிஷ்டவசமாக மரம்  விழுந்த நேரத்தில் பொதுமக்கள், யாரும் அங்கு இல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது.  பின்னர், நெடுஞ்சாலை துறையினர் மரத்தை அப்புறப்படுத்தினர். 100 ஆண்டுகள் கடந்த புளிய மரம் என்பதால், அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்து சென்றனர்.


Tags : fig tree
× RELATED வெப்பம் தணிக்கும் வெட்டி வேர்!