×

திருத்தணியில் 4 நாட்களுக்கு மின் நிறுத்தம்

திருத்தணி: திருத்தணி கோட்டத்தில் புதிய மின்மாற்றி  அமைக்கப்படுவதையொட்டி 4 நாட்களுக்கு மின் நிறுத்தம் செய்யப்படும் என திருத்தணி மின்வாரியம் அறிவித்துள்ளது.   இதுகுறித்து, திருத்தணி மின்வாரிய கோட்ட பொறியாளர் கனகராஜன் கூறியதாவது, திருத்தணி கோட்டத்தில் உள்ள கே.ஜி.கண்டிகை துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட மாம்பாக்கசத்திரம் பகுதியில் குறைந்த அழுத்த மின்சாரம் வருகிறது. இதை சரி செய்யும் வகையில், 11 கி.வோ. கொண்ட புதிய மின்மாற்றி அமைக்கும் பணி இம்மாதம் 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறும். எனவே, இ.என்.கண்டிகை, செருக்கனூர், எஸ்.அக்ரஹாரம், ராமகிருஷ்ணாபுரம், மாம்பாக்கசத்திரம், குடிகுண்டா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை தொடர்ந்து 4 நாட்களுக்கு மின் நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.Tags : Thiruthani. , Power outage,Thiruthani
× RELATED மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த...