×

கொரோனா போராட்டத்தில் பணிபுரிந்து உயிரிழந்த அரசு பணியாளர்களுக்கு நிவாரணம்: குடும்பத்தார்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு கோரிக்கை

சென்னை: கொரோனா தொற்று பணியில் இருந்தபோது உயிரிழந்த சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பிற அரசுத்துறை பணியாளர்களுக்கு நிவாண  வழங்க உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட  அறிக்கையில், கொரோனா தொற்று நோய் போராட்டத்தில் முன் நின்று பணிபுரியும் அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறையைச்  சார்ந்த பணியாளர்கள், காவல்துறை மற்றும் பிற அரசுத்துறையைச் சாந்த தூய்மை பணியாளர்கள்,ஏதேனும் எதிர்பாராதவிதமாக இறக்க நேரிட்டால்  அவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக 10 லட்சம் ரூபாய் வழங்குவதற்கு பதிலாக 50 லட்சம் வழங்கப்படும் எனவும், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு  தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்தேர்வு தொடர்பாக தங்களது துறையில் கொரோனா நோய் தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிர் இழந்த பணியாளர் குடும்பத்திற்கு அரசால் வழங்கப்படும்  முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி பெற்று தருவதற்கு முன்மொழிவு அரசுக்கு அனுப்பிட ஏதுவாக கீழ்கண்ட ஆவணங்களுடன் தங்களது  முன்மொழிவினை உடனடியாக அனுப்பி வைத்திட தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன்.

முக்கிய சான்றுகள்:

* கொரோனா தொற்று நோய் தடுப்பு பணியல் ஈடுபட்டார் என்பதற்கான சான்று.
* கொரோனா தொற்று நோய் காரணமாக நோய் பிடியில் இருந்ததற்கான மருத்துவ சான்று.
* கொரோனா நோய் தொற்று தடுப்பு பணியில் செயல்முறை ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பின் அதன் நகல்.
* இறப்பு சான்று நகல்.
* வாரிசு சான்றிதழ் நகல்.
* குடும்ப அட்டை நகல்.

மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் உரிய விவரங்களை பூர்த்தி செய்து ஒவ்வொரு நபருக்கும் தனித்தனி முன்மொழிவுகளுடன் அனுப்பி  வைத்திடவும்க் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Tags : servants ,struggle ,Corona ,families ,Tamil Nadu , Relief for civil servants who lost their lives working in the Corona struggle: Tamil Nadu government request for families to apply
× RELATED தடய அறிவியல் துறையில்...