ராஜஸ்தானில் திடீர் திருப்பம்!: ஜெய்ப்பூரில் தங்க வைக்கப்பட்டிருந்த முதல்வர் அசோக் கெலாட் ஆதரவு எம்.ஏ.க்கள் ஜெய்சால்மருக்கு மாற்றம்..!!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் திடீர் திருப்பமாக ஜெய்ப்பூரில் தங்க வைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஜெய்சால்மருக்கு விமானங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். சச்சின் பைலட் உட்பட 19 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியதை அடுத்து, அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் அணி மாறாமல் இருக்க ஜெய்ப்பூரில் ஒரே ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். ஆகஸ்ட் 14ம் தேதி அன்று சட்டமன்றம் கூடவுள்ளதால் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அசோக் கெலாட் உள்ளார்.

மேலும், தம்முடன் உள்ள எம்.எல்.ஏக்களை இழுக்க 15 கோடி ரூபாய் வரை கொடுக்க குதிரை பேரம் நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்த நிலையில் ஜெய்ப்பூரில் தங்கவைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேருந்து மூலம் விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் விமானத்தில் ஜெய்சால்மர் புறப்பட்டு சென்றனர். பிரச்சனையின் உச்சமாக அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட், சபாநாயகர் சி.பி.  ஜோஷியை சந்தித்து பேசியது விஸ்பரூபம் எடுத்துள்ளது.

அசோக் கெலாட் மகன் மற்றும் சபாநாயகர் பேசும் வீடியோ கசிந்துள்ளது. அதில் 30 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தால் ஆட்சியை காப்பாற்ற முடியாது என்று சபாநாயகர் பேசுவது இடம்பெற்றுள்ளது. இதனால் நடுநிலை வகிக்க வேண்டிய சபாநாயகர் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி அவர் பதவி விலக வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.

Related Stories: