×

பீகாரில் கொட்டி தீர்க்கும் கனமழையால் வெள்ளத்தில் தத்தளிக்கும் 10 மாவட்டங்கள்..!! 40 லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!!

பீகார்:  பீகாரில் கொட்டி தீர்க்கும் கனமழையால் 40 லட்சம் பேரின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக வடமாநிலங்களான பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழையானது வெளுத்து வாங்குகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தற்போது பீகார் மாநிலத்தில் பெய்துவரும் பலத்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிழக்கு சாம்ரான், கோபால்கன்ஞ், ஷரன், மிஷாகர்ப்பூர், கிஷன்கன்ஞ் உள்ளிட்ட 10 மாவட்டங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இதனைத்தொடர்ந்து ஆயிரத்திக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 40 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பீகாரில் இயல்பை விட 89 சதவீதம் அளவிற்கு கூடுதலான மழை கொட்டி தீர்த்துள்ளது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் தெகுளி கிராமத்தில் தேசிய மின்பகிர்வு கழகத்தை  வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதன் காரணமாக சுமார் 14 மாவட்டங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அசாம் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில், கனமழை வெள்ளத்தால் பீகாரில் சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை மீட்க்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : districts ,Bihar , Assam ,Bihar Floods,
× RELATED இந்தியாவில் அதிக வெப்ப அலை வீசிய...