×

'காங். எம்.எல்.ஏக்களுக்கு ரூ. 15 கோடி வரை குதிரை பேரம் ': பாரதிய ஜனதா கட்சி மீது முதல்வர் அசோக் கெலாட் புகார்..!!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏக்களுக்கு சுமார் 15 கோடி ரூபாய் வரை குதிரை பேரம் பேசப்படுவதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டியுள்ளார். நீண்ட இழுபறிக்கு பிறகு ஆகஸ்ட் 14ம் தேதியன்று அவை கூட்டப்படும் என்று ஆளுநர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனையடுத்து அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி ஆட்சியை தக்கவைக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய முதல்வர் அசோக் கெலாட், சட்டசபை கூட்டத்தொடர் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் குதிரை பேரம் சூடுபிடித்துள்ளது என்றார். எம்.எல்.ஏக்களின் விலை 10 கோடி ரூபாயில் இருந்து தற்போது 15 கோடியாக உயர்ந்துவிட்டது என்று அவர் கூறினார். சச்சின் பைலட் உட்பட 19 காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் டெல்லி அருகே சொகுசு ஹோட்டலில் முகாமிட்டுள்ளனர்.

இவர்களுக்கு பாரதிய ஜனதா பாதுகாப்பு அளித்து வருகிறது என்பது காங்கிரசின் குற்றச்சாட்டாகும். மேலும் சில எம்.எல்.ஏக்களை இழுத்து காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் வேலையை பாரதிய ஜனதா மேலிட தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. சொற்ப மெஜாரிட்டி மட்டுமே கெலாட் அரசுக்கு உள்ளதால் ராஜஸ்தான் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

Tags : Ashok Kelad ,Horse ,BJP ,Ashok Gehlot , Ashok Gehlot ,Horse-Trading ,Bjp
× RELATED காங். தலைவர் பதவிக்கு டிஜிட்டல் முறையில் தேர்தல்