×

பண்ருட்டி அருகே 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை!: ஆன்லைன் வகுப்பில் படிக்க முடியாததால் விபரீத முடிவு..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஆன்லைன் வகுப்பில் படிக்க செல்போன் வாங்கி தராததால் 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுதொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது 14 வயது மகன் விக்னேஷ் கொள்ளுக்காரன்குட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். ஊரடங்கு காலத்தில் அந்த பள்ளியில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

எனவே ஆன்லைனில் படிப்பதற்கு வசதியாக செல்போன் ஒன்றினை வாங்கி தருமாறு விக்னேஷ் தனது தந்தையிடம் கேட்டுள்ளார். அதற்கு விஜயகுமார் தற்போது தன்னிடம் பணம் இல்லை என்றும் முந்திரிக்கொட்டைகளை விற்று பணம் வந்த பின் செல்போன் வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த விக்னேஷ் வீட்டில் தனது தாயாரின் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

தகவல் அறிந்து வந்த காடும்புலியூர் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், தற்போது ஆன்லைன் கல்விக்கு செல்போன் வாங்க முடியாமல் மாணவன் உயிரிழந்திருப்பது கடலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : student ,suicide ,Panruti , 10th class student,commits suicide ,Panruti!
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு