×

10 ஆண்டுகளுக்கு பிறகு கிண்டியில் உள்ள ஆய்வகத்தில் பி.சி.ஜி.தடுப்பு மருந்து உற்பத்தி மீண்டும் தொடக்கம்!

சென்னை: 10 ஆண்டுகளுக்கு பிறகு கிண்டியில் செயல்படக்கூடிய ஆய்வகத்தில் பி.சி.ஜி. தடுப்பு ஊசி மருந்து உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் அமைந்துள்ள ஆய்வகத்தில் பி.சி.ஜி. தடுப்பு மருந்து கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு வரை தயாரிக்கப்பட்டு வந்தது. காசநோய் வராமல் தடுப்பதற்காக இந்த பி.சி.ஜி. தடுப்பு மருந்து போடப்படுகிறது. இந்த தடுப்பு மருந்தானது குறிப்பாக பிறந்த குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய மருந்தாக உள்ளது.

இந்தியாவில் இந்த மருந்து வருடத்திற்கு கிட்டத்தட்ட 7 கோடி பேருக்கு கொடுக்கப்பட்டு வந்தது. இதில் 50 சதவீதம் மருந்து சென்னை கிண்டியில் உள்ள பி.சி.ஜி. ஆய்வாலகத்தில் தான் தயாரிக்கப்பட்டு வந்தது. கடந்த 2008ம் ஆண்டு ஆய்வக கட்டமைப்பு சரிவரவில்லை என்ற காரணத்தை மையப்படுத்தி இந்த ஆய்வகம் மூடப்பட்டது. இந்த ஆய்வகம் மூடப்பட்டு 12 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் அந்த கட்டமைப்புகள் சரிசெய்யப்பட்டு ஆய்வகம் தொடக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலமாக கிட்டத்தட்ட வருடத்திற்கு 4 கோடி பி.சி.ஜி. தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் வழங்கப்படவுள்ளது. இது மத்திய அரசின் நிறுவனம் என்ற காரணத்தினால் பி.சி.ஜி. தடுப்பு மருந்தின் விலையானது குறைவதற்கான வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த 12 ஆண்டுகளில் தனியார் மருந்து நிறுவனங்கள் காசநோய்க்கான தடுப்பு மருந்தினை தயாரித்து இந்திய அளவில் வழங்கி வந்தன. இந்நிலையில் மத்திய அரசு நிறுவனமே தற்போது தயாரிப்பினை தொடங்கியிருப்பதால் தடுப்பு மருந்திற்கான விலை குறைய அதிகளவில் வாய்ப்புள்ளது.

Tags : PCG ,laboratory ,Kindi ,Guindy , BCG vaccine
× RELATED நெல்லை காங்கிரஸ் நிர்வாகி...