×

12ம் வகுப்பு படித்துக்கொண்டே 11ம் வகுப்பில் தோல்வியுற்ற தேர்வுகளை மாணவர்கள் எழுதலாம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஈரோடு: 12ம் வகுப்பு படித்துக்கொண்டே 11ம் வகுப்பில் தோல்வியுற்ற தேர்வுகளை மாணவர்கள் எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்தது. இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 16ம் தேதி வெளியானது. அதன் தொடர்ச்சியாக 8,32,475 பேர் எழுதிய பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 2020 பிளஸ்-1 பொதுத்தேர்வு மற்றும் கடந்த 27ம் தேதி நடைபெற்ற பிளஸ்-2 மறுதேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் பிளஸ்-1 பொதுத்தேர்வில்ஒஃ 96.04 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 1 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் 12ம் வகுப்பு படித்துக்கொண்டே 11ம் வகுப்பில் தோல்வியுற்ற தேர்வுகளை மாணவர்கள் எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.  11ம் வகுப்பு தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி அதிகரித்துள்ளது என்றும், பிளஸ் 1 தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் எனவும் அப்போது அவர் கூறினார். மேலும், 11ம் வகுப்பு தேர்ச்சி அடையாத மாணவர்களும் 12ம் வகுப்பு செல்லலாம் என்றும், 12ம் வகுப்பு படித்து கொண்டே 11ம் வகுப்பில் தேர்ச்சி அடையாத பாடங்களை எழுதலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


Tags : Exam, Plus 1, School Education Minister Senkottayan
× RELATED புதுச்சேரி மத்திய பல்கலை.யில்...