×

கொடைக்கானல் அண்ணாநகர் சாலை படுமோசம்

கொடைக்கானல்: கொடைக்கானல் அண்ணாநகர் சாலை சேதமடைந்து உள்ளதால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். கொடைக்கானல் அண்ணாநகரில் சுமார் 1000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கொடைக்கானல்- வத்தலக்குண்டு லாஸ்ட் காட்டு சாலை இணைப்பிலிருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை சாலையே பிரதானமாக உள்ளது. இந்த சாலை பல மாதங்களாக சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

ஏற்கனவே இது மலைச்சாலை போல் செங்குத்தாக இருப்பதால் வாகனங்களை மிக கவனத்துடன்தான் இயக்கி வருகின்றனர். இந்நிலையில் தற்போது சாலையில் மெகா சைஸ் பள்ளங்களும் வாகனஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. சில சமயம் வாகனங்கள் விபத்திலும் சிக்கி வருகின்றன. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கொடைக்கானல் நகராட்சியில் பலமுறை மனு அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே கொடைக்கானல் நகராட்சி அண்ணாநகர் சாலையை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kodaikanal Anna Nagar Road , Kodaikanal Anna Nagar Road is bad
× RELATED இணைய வழியில் இறுதித்தேர்வை குழுவாக...